சாப்பாடு விஷயத்தில் சாஸ்திரம்... சொல்றதைக்
கேளுங்க! தனக்குத்தானே சோறிட்டுக் கொள்வது ஆயுளைக் குறைக்கும். இஞ்சி,
பாகற்காய், கஞ்சி, கட்டித்தயிர், இலைக்கறி (கீரை), நெல்லிக்காய் இரவில்
சாப்பிடக்கூடாது. சாப்பிட்டால் லட்சுமி அவ்வீட்டில் வாசம் செய்யமாட்டாள்.
பால்சோறு சாப்பிடலாம். கிழக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் ஆயுள்
வளரும். மேற்கு நோக்கினால் பொருள் சேரும். தெற்கு நோக்கினால் புகழ் வளரும்.
வடக்கு மட்டும் கூடாது. நோய் வரும். சோறு, நெய், உப்பு ஆகியவற்றை கையால்
எடுக்கக்கூடாது. கரண்டி வைத்துக் கொள்ள வேண்டும். -இந்து மத வரலாறு..

No comments:
Post a Comment