Ninaivil Nindravai
Popular
Saturday, 8 March 2014
எந்த நிகழ்வுக்கும் நான் காரணமல்ல என்பதை உணருங்கள்.
வாழ்க்கையில் நடப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்.
பார்வையாளராக இருந்து வாழ்க்கை நாடகத்தை ரசிக்க கற்றுக் கொள்ளுங்கள்.
மாற்றங்களுக்கு தயாராக இருங்கள்.
சூழ்நிலைகளுக்கேற்ப மாறவும் தயங்கதீர்கள்.
ஆசைப்படுவதற்கும்..அருளப்படுவதற்கும் உள்ள வித்தியாசமே கவலையாக மாறுகிறது.
நியாயமான ஆசைகள் நிறைவேற முறையான வழிபாடுகள் செய்க.
சாப்பாடு விஷயத்தில் சாஸ்திரம்... சொல்றதைக்
கேளுங்க! தனக்குத்தானே சோறிட்டுக் கொள்வது ஆயுளைக் குறைக்கும். இஞ்சி,
பாகற்காய், கஞ்சி, கட்டித்தயிர், இலைக்கறி (கீரை), நெல்லிக்காய் இரவில்
சாப்பிடக்கூடாது. சாப்பிட்டால் லட்சுமி அவ்வீட்டில் வாசம் செய்யமாட்டாள்.
பால்சோறு சாப்பிடலாம். கிழக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் ஆயுள்
வளரும். மேற்கு நோக்கினால் பொருள் சேரும். தெற்கு நோக்கினால் புகழ் வளரும்.
வடக்கு மட்டும் கூடாது. நோய் வரும். சோறு, நெய், உப்பு ஆகியவற்றை கையால்
எடுக்கக்கூடாது. கரண்டி வைத்துக் கொள்ள வேண்டும். -இந்து மத வரலாறு..
ஒரு வானொலி பேட்டியில் நாகேஷ்:
வானொலி: நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்?
நாகேஷ்: நான் கவலையே படமாட்டேன் சார். ஒரு கட்டடம் கட்டும் போது, சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம் கட்டி, குறுக்குப் பலகைகள் போட்டு, அதன் மேல பல சித்தாள்கள் நின்னு, கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் பல ஆண்டுகளுக்குப் பிறகு அது முடிந்த பிறகு, அந்தக் கட்டிடத்துக்கு வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு, கீழ இறங்கும் போது ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள். கட்டடம் முடிந்து கிருகப் பிரவேசத்தன்று எந்தக் கட்டடம் கட்டுவதற்கு முக்கிய காரணமாக இருந்ததோ அந்தச் சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாமல் பின்னால் எங்கயோ மறைத்து வைத்துவிட்டு, வேறெங்கேயோ வளர்ந்த வாழை மரத்தை முன்னால் நட்டு கிருகப் பிரவேசம் நடத்தி அனைவரையும் வரவேற்பார்கள்.
அத்தனை பெருமையும் வாழை மரத்துக்குப் போய் விடும். இதில் உள்ள உண்மை என்ன தெரியுமா? அந்த வாழை மரம் மூன்று நாள் வாழ்க்கை தான் வாழும். ஆடுமாடுகள் மேயும். குழந்தைகள் பிய்த்தெடுப்பார்கள். பிறகு குப்பை வண்டியிலே போய்ச் சேரும். மறைந்து கிடக்கிறதே அந்தச் சவுக்கு மரம் கண்ணீர் விடுவதில்லை. அடுத்த கட்டடம் கட்டுவதற்கு தயார் நிலையில் என்றைக்கும் சிரித்துக் கொண்டேயிருக்கும்.!!!
“எனக்கு சான்ஸ் இல்லை.நான் ஒழிஞ்சு போறேன்,செத்துப்போறேன்’’ – சந்திரபாபு பிளாஷ்பேக்
சினிமா வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் ஜெமினி ஸ்டுடியோவில் விஷம் குடித்து சுருண்டு கிடந்தார் சந்திரபாபு. அப்போது இரவு 1.30 மணி. ஜெமினி கணேசன் உள்ளிட்ட படக்கம்பெனி ஊழியர்கள் ஆம்புலன்ஸ் வரவழைத்து அவரை ராயப்பேட்டை மருத்துவமனைக்குக் கொண்டுபோனார்கள். முதலுதவி முடிந்ததும், தற்கொலைக் குற்றவாளி என்ற வகையில் இன்ஸ்பெக்டர் ரங்காச்சாரி கேள்வி கேட்கிறார்.
“உன் பெயர் என்ன?’’
“சந்திரபாபு’’
“தற்கொலை செய்து கொள்ள விஷம் குடித்தாயா?’’
“ஆமாம்’’
“ஏன்’’
“சினிமாவில் நடிக்க வந்தேன், சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அதிருக்கட்டும், எனக்கு இப்போ சிகரெட் வேணும்’’ என்றதும் இன்ஸ்பெக்டர் ரங்காச்சாரி கொடுக்கிறார். “இது பிளேயர்ஸ். என் பிராண்ட் கோல்டு பிளாக்’’ என்கிறார் சந்திரபாபு. ஆளனுப்பி வாங்கிக்கொடுக்கிறார் இன்ஸ்பெக்டர்.
மாஜிஸ்திரேட் கோர்ட்டில் விசாரணை. நீதிபதி கேள்வி கேட்கிறார்.
‘’ஏன் இப்படிச் செஞ்சே?’’
“எனக்கு வாழ்க்கை வெறுத்துப்போச்சு, விஷம் குடிச்சேன்’’
“இனிமேலும் இந்தமாதிரி செய்வியா?’’
“சொல்ல முடியாது’’
“ஏன் சொல்லமுடியாது?’’ என்று நீதிபதி கேட்டதும், தனது பாக்கெட்டிலிருந்து தீப்பெட்டியை எடுத்து, தீக்குச்சியை உரசி உள்ளங்கையில் வைத்து எல்லோருக்கும் காட்டினார். திடுக்கிட்டுப்போன நீதிபதி, “என்ன செய்கிறாய் நீ?’’ என்று அதட்டலாகக் கேட்டார். “நான் செய்ததை உங்களால் பார்க்க முடிந்தது. ஆனால், அந்தச் சூட்டை உங்களால் உணரமுடியாது. அதேபோலத்தான் என் உணர்ச்சிகளை யாராலும் ஃபீல் பண்ண முடியாது. சரி, எனக்கு என்ன தண்டனை?’’ என்றார். “முதல்முறை என்பதால் உன்னை மன்னிக்கிறேன்.
நீ போகலாம்’’ என்று நீதிபதி சொன்னதும், “ஓ.கே நெக்ஸ்ட் டைம் பார்க்கலாம்’’ என்றபடி கோர்ட்டைவிட்டு வெளியேறினார் சந்திரபாபு.
பிறந்த சில நாட்களிலேயே பிழைக்க மாட்டார் என்று நம்பப்பட்டவர் சந்திரபாபு. அவரைக் கடுமையான விஷக் காய்ச்சல் தாக்கியிருந்தது. சுதந்திரப் போராட்ட வீரரான அப்பா ஜோசப் ராட்ரிக்ஸ் தூத்துக்குடி தேவாலயத்துக்கு மனைவியுடன் போனார். குழந்தையைக் கீழே கிடத்திவிட்டு, இருவரும் முழந்தாளிட்டு, “ஏசுவே! இந்தக் குழந்தை எங்களுக்கு நீர் கொடுத்த பிச்சை. இதை பிழைக்கச்செய்யும்! குழந்தைக்கு பிச்சை என்றே பெயரிடுகிறோம்’’ என்று வேண்டிக்கொண்டார்கள். குழந்தை பிழைத்தது. ஜோசப் பிச்சை என்று பெயரிட்டார்கள்.
ஜெமினி ஸ்டுடியோவில் விஷம் குடித்து ஏற்படுத்திய பரபரப்பில் பட வாய்ப்பு கிடைத்தது. பி.எஸ். ராமையா இயக்கத்தில் ‘தன அமராவதி’ படத்தில் அறிமுகமானார் சந்திரபாபு..ஜெமினி நிறுவனத்தின் ‘ராஜி என் கண்மணி’ படத்தில் வாய்ப்பு கொடுத்தார்கள். அதற்கு காரணம் ஒரு கடிதம்.
“திரு.வாசன் அவர்களுக்கு, நான் ஒரு சான்ஸ் கேட்டேன். நீங்க முடியாதுன்னு சொல்லீட்டீங்க. என்னை மாதிரி நல்லா நடிக்கத் தெரிஞ்சவனுக்கு நீங்க சான்ஸ் கொடுக்காதது தப்பு. இத்தனை பெரிய ஸ்டுடியோவில் எனக்கு சான்ஸ் இல்லை. நான் ஒழிஞ்சு போறேன், செத்துப்போறேன்’’ என்று விஷம் குடித்தபோது சந்திரபாபு எழுதிவைத்திருந்த கடிதத்தைக் கைப்பற்றி வாசனிடம் ஒப்படைத்தவர் ஜெமினி கணேசன்.
அவருக்கு மனைவியாக வந்த ஷீலா தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக ஷீலாவை உரியவரிடம் ஒப்படைத்தார் சந்திரபாபு. அதன் தொடர்ச்சியான மதுப்பழக்கத்தில் விழ்ந்தார்.
தமிழகத்தின் கலைக்குழுவுக்கு ஒருமுறை சிறப்பு விருந்துவைத்தார் அப்போதைய ஜனாதிபதி எஸ். ராதாகிருஷ்ணன். அந்த நிகழ்ச்சியில் சந்திரபாபு பாடிய ‘பிறக்கும்போதும் அழுகின்றான்…’ பாடலை ரொம்பவே ரசித்தார். அந்த ரசணையைக் கண்டு நெகிழ்ந்த சந்திரபாபு, அவரின் தோளில் கைபோட்டு, தாடையைப் பிடித்து, ‘’நீ ரசிகன்டா’’ என்று சொன்னதைக் கேட்டு கலைக்குழுவே ஆடிப்போயிருக்கிறது. அப்படிப்பட்ட அப்பாவித் துணிச்சல்காரர் சந்திரபாபு.

Tuesday, 26 March 2013
மாணவ சகோதர சகோதரிகளே!உங்கள் நண்பர்கள் யார்?
தமிழகத்தின் மீண்டும் ஒரு முறை புரட்சி மாற்றத்துக்கு வித்திட்ட மாணவ
தோழமைகளுக்கு நன்றியோடு மீண்டும் கல்வியில் கவனம் செலுத்தும் கால அறிக்கை
வந்துள்ளது. மாணவர்கள் போராட்டத்தில் ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளை
புரிந்து கொண்ட மனிதாபிமான உணர்வுகளும்,பன்னாட்டு அரசியல் பற்றிய தெளிவும்
இருப்பதை ஊடக நேரலைகளின் மூலம் உணர முடிகிறது.அதே நேரத்தில் உண்ணாவிரத
போராட்ட மாணவர்களின் தனிக்கருத்துகளில் பல மாற்றுக்கருத்துக்களும் எதிரும்
புதிருமாகவும்,இடது வலதுசாரி சித்தாந்த வாசங்கள் காணப்பட்டதன் விளைவாக
இந்தக் கருத்துக்கள் சில மாணவர்களுக்குப் போய்ச் சேரவேண்டுமென்ற நோக்கில்
பதிவு செய்யப்படுகிறது.
.ஈழப்பிரச்சினையைப் பொறுத்த வரையில் இந்திய மத்திய அரசின் ஏமாற்று
வித்தைகளை போராட்டக் கோரிக்கைகள் வெளிப்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு
தினங்களுக்கு முன்பு ஐ.நா.மனித உரிமைக்குழுவில் தனது ஆதரவாளர்கள்
யார்,ஆதரவின்மையாளர்கள் யார் என்று தெரிந்து கொள்வதற்காகவே இலங்கை
வாக்கெடுப்பை இந்தியாவின் ஆலோசனையையும் மீறி வற்புறுத்தியது.இந்தியா இலங்கை
ஆதரவு, ஆதரவின்மையிலிருது தப்பிப்பதற்காகவே மொத்தமாக தீர்மானம்
நிறைவேற்றுவதற்கு விரும்பியது.இலங்கை அரசு தான் தோல்வியடைவோம் என அறிந்தும்
தீர்மான ஆதரவு நாடுகள்,தமது ஆதரவு நாடுகளை அறிந்து கொள்ள
விரும்பியது.இலங்கை அரசுக்கு மட்டுமல்ல ஈழத்தமிழர்களுக்காக போராடும்
ஒவ்வொருவரும் தமிழர்களின் ஆதரவாளர்கள் யார், ஆதரவின்மையாளர்கள் யார் என்று
அறிந்து கொள்வது முக்கியம்.
அமெரிக்க தீர்மான ஆதரவு நாடுகள்
இலங்கைக்கு ஆதரவாக தீர்மானத்தை எதிர்த்த நாடுகள்
நடுநிலை நாடுகள்
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை காலம் தொட்டு இலங்கையின் மனித உரிமை மீறல்கள்
பல ஊடகங்களும்,தமிழ் உணர்வாளர்களும்,இணைய கருத்துப் பரிமாறல்களும் செய்து
வந்தன.என்ற போதிலும் மொத்த தமிழர்களையும் உலகையும் உலுக்கவில்லை.
போருக்குப் பின் ஒப்புக்கு சப்பாணியாக பான் கி மூன் இலங்கை பயணம் செய்தார்.
2009ல் ஐ.நா மனித உரிமைக்குழு தீர்மானத்தை அனைத்து நாடுகளும் இலங்கைக்கு
ஆதரவாக வாக்களித்தன.இதில் இந்தியாவின் பங்கு மிக முக்கியமானதாக
இருந்தது.இதில் திருப்தியடையாத மனித உரிமைக்குழுக்களின் அழுத்தங்களின்
காரணமாக 2011ல் Report of the Secretary-General's Panel of Experts on
Accountability in Sri Lanka என முவர் குழுவை அமைத்தார்.
மூவர் குழுவின் உறுப்பினர்கள்
1. இந்தோனேசியாவின் முன்னாள் அட்டார்னி ஜெனரலும்,மனித உரிமைக்குழு தேசிய ஆணையத்தின் உறுப்பினர மர்சூகி தருஸ்மன்- Marzuki Darusman,
2. தென் ஆப்பிரிக்காவின் நீதிபதியும் டெஸ்மன்ட் டூடுவின் சமாதான நிறுவனத்தின் நிர்வாக தலைவர் யாஸ்மின் சூகா - Yasmin Sooka
3/ அமெரிக்காவின் மிக்ஸிகன் சட்டப் பல்கலைக்கழக பேராசிரியர் ஸ்டீவன் ஆர். ராட்னர் - Steven R. Ratner
இம் மூவரின் இலங்கை போர்க்குற்ற அறிக்கை பக்க சார்பில்லாமல் இலங்கை அரசு செய்த போர்க்குற்றங்களையும்,விடுதலைப்புலிகளின் தவறுகளையும், பொது மக்களை பாதுகாப்பு கேடயங்களாக பயன்படுத்தினர் என்ற குற்றச்சாட்டையும் முன் வைத்தது.
இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணைகளையும்,விடுதலைப்புலிகள் மீதான சிறுவர்களையும் போரில் பயன்படுத்தியது போன்ற குற்றங்களையும் இதன் அடிப்படையில்தான் துவங்கியிருக்க வேண்டும்.மாறாக இலங்கை அரசு இம்மூவர் குழு ஐ.நா அறிக்கையை தருஸ்மன் அறிக்கையென்றும் தனது நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என்றும் நிராகரித்தது.இதனிடையே தமிழகத்தில் கட்சிகளின் நலன் சார்ந்த ஆனால் தமிழ் உணர்வோடு ஈழமக்களுக்கான குரல்கள் ஒலித்தன.
தி.மு.க அ.தி.மு.க பங்காளிச் சண்டைகளுக்கும் அப்பாலும்,திருமாவளவன் தி.மு.க சார்பு குரலுக்கு அப்பாலும் ஈழப்பிரச்சினை பற்றிய கவலைகள் இருக்கவே செய்தன.பாட்டாளி மக்கள் கட்சி பசுமைத் தாயகம் என்ற பெயரில் ஐ.நா.மனித உரிமைக் குழுவுக்குள் சென்றதைப் பாராட்ட வேண்டும்.ராமதாஸ் குழுவினரின் சாதி பிற்போக்குத்தனம்,ஈழ ஆதரவு இரண்டையும் வெவ்வேறு தராசுகளில் எடை போடுவது நல்லது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
நிரந்தர ஈழத்தமிழர்களின் குரலாக வை.கோ,நெடுமாறன் போன்றவர்களின் குரல் ஒலித்தாலும் அதற்கான வலுவான மக்கள் பலமில்லாமல் இருந்தது.
புதிய குரலாக சீமான் உருவாகினாலும் கூட அவரது உணர்ச்சி வசப்படல்,தெளிவான சிந்தனையற்ற தன்மை அல்ட்ரா போராளியாக மட்டுமே பிரதிபலித்தது.மே 17 இயக்க இளைய தோழர்கள் திருமுருகன்,உமர் போன்றவர்களின் உலக அரசியல் தெளிவு நம்பிக்கை அளித்தாலும் கூட மெரினா மெழுகுவர்த்தி போராட்டங்கள் வரவேற்பை பெற்றாலும் கூட மக்களிடையே பரவலாக போய்ச் சேரவில்லை.பத்திரிகையாசிரியர் அய்யநாதன் போன்றவர்கள் ஈழத்தமிழர்களின் பிரச்சினையை ஊடகங்கள் மூலமாக பேசி வந்தனர்.சென்ற பாராளுமன்ற தேர்தலின் காலத்தில் கவிஞர் தாமரை இந்தியா மீது அறம் பாடினார்.புலம் பெயர் தமிழர்கள் அமைப்பு ரீதியாகவும்,மனித உரிமைக்குழுக்களின் துணையோடும், உண்ணாவிரதம், ராஜபக்சே லண்டன் வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் என பல வகையிலும் போராடியும் கூடஇலங்கை அரசு இந்தியா,சீனா,ரஷ்யா கவசங்களோடு அனைத்து அழுத்தங்களையும் உலக அரங்கில் உதாசீனப்படுத்தி வந்தது.ஒருங்கிணைந்த தன்மையற்ற நிலையில் தமிழர்களிடம் ஓரளவுக்கு சோர்வும் கூட காணப்பட்டது
இலங்கைப் பிரச்சினையை உலகம் திரும்ப பார்க்க வைத்ததின் பின்புலமாக புலம் பெயர்கள் தமிழர்கள் இருந்திருக்க கூடுமென்றாலும் கூட இலங்கையின் போர்க்குற்ற மனித உரிமை மீறல்களை.உலக அரங்கில் கொண்டு வந்ததின் முக்கிய பங்கு சேனல் 4 தொலைக்காட்சிக்கும்,அமெரிக்கா ஐ.நா மனித உரிமைக்குழுவில் இலங்கை மீதான தீர்மானம் கொண்டு வந்ததுமே.
இதனைத் தொடர்ந்து திருடனையே நீதிபதியாக நியமித்த கதையாக கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்கமும்- LLRC என்ற பெயரில் இலங்கையே தன்னைத் தானே பரிசோதித்துக்கொள்வதாக அறிவித்ததன் அடிப்படையிலேயே இப்பொழுது இரண்டாம் முறையாக அமெரிக்காவின் தீர்மானம் நிறைவேறியுள்ளது. அமெரிக்காவின் தீர்மானம் நான்கு வரைவு மாற்றங்கள் செய்யப்பட்டு நீர்த்துப் போய் இருந்தாலும் கூட அமெரிக்க தீர்மானத்தை ஒட்டியே மேலும் தமிழர்கள் நகரவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.சீனா,ரஷ்யா போன்ற நாடுகள் ஈழத்தமிழர்களின் நலன் சார்ந்து உதவப் போவதில்லை.
இப்பொழுது இந்திய பாராளுமன்றத்தில் தி.மு.க,அ,தி.மு.க போன்ற பாராளுமன்ற
உறுப்பினர்கள் கொடுத்த அழுத்தங்கள் போன்றும்,கலைஞர் கருணாநிதி
கூட்டணியிலிருந்து தி.மு.க விலகிக்கொள்கிறது என்று காங்கிரஸை கழட்டி
விட்டது போன்ற சூழலுக்கு ஏற்ப இந்தியா செயல்படும்.எனவே ஓரளவுக்கு மனித
உரிமைகளை மதிக்கும் ஐரோப்பிய நாடுகள்,அமெரிக்காவின் ஆதரவோடு மட்டுமே
ஈழத்தமிழர்களின் நல்வாழ்வுக்கான வழிகளை தேட முடியும்.
மாணவர்கள் போராட்டங்கள் அவசியமான ஒன்று என்பது நிரூபணமாகி விட்ட ஒன்று என்ற போதிலும் அமெரிக்காவிற்கு எதிராகவும் பெப்சி,கோகா கோலாவை புறக்கணிப்போம் போன்ற போராட்ட அணுகுமுறைகள் போராட்டத்துக்கு உதவாது.பெப்சி,கோகா கோலா புறக்கணிப்பு போராட்டம் ஏற்கனவே அமெரிக்கா ஈராக்கின் ஆக்கிரமிப்பில் பரிசோதனை செய்து பார்த்து தோல்வியடைந்த ஒன்று.அமெரிக்கா ஒரு புறம் மனித உரிமைகளை வலுப்படுத்தவும் இன்னொரு புறம் இலங்கைக்கு பொருளாதார ரீதியாக உதவுவது போன்ற இரட்டை கொள்கையாக போராட்ட களம் அமைய வேண்டும்.அமெரிக்கா மீதான எதிர்ப்பு சீனா,ரஷ்யா போன்ற நாடுகளுக்கும் முக்கியமாக இலங்கைக்கு உதவுவது மாதிரியாக அமைந்து விடும்.
ஒவ்வொரு இடத்தின் தூதரகங்கள் சார்ந்து மக்கள் போராட்டங்கள்,ஒரு நாட்டின் பிரச்சினைகள்,அரசியல் நகர்வுகள் என அத்தனையும் அரசு கொள்கைகள் அமைவதற்கு ஆவணப் பத்திரங்களாகின்றன என்பதை பத்திரிகை செய்திகளுக்கும் அப்பால் என்ன நிகழ்கின்றன என்பதை விக்கிலீக்ஸ் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துகிறது.எனவே போராட்டக்கள சாதுர்யம்,ஈழத்தமிழர்களின் நலன் சார்ந்த அல்லது மனித உரிமைகளைக்கு ஓரளவுக்கு முக்கியத்துவம் தரும் நாடுகளீன் நட்போடு இன்னும் மேல் நோக்கி நகர்வதே ஈழத்தமிழர்களுக்கு விடியலைப் பெற்றுத் தரும்.

வரும் நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தின் குரலையும்,ஈழத்தமிழர்களின்
பிரச்சினையை ஜனநாயக ரீதியாக முன்கொண்டு செல்ல வேண்டிய ஒரு முக்கியமான
காலகட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.அரசியல் சுயநலங்கள்,ஓட்டுக்கு
பணம் போன்றவைகளை புறம் தள்ளி யார் தமிழகத்தின் பிரச்சினைகளுக்கும்,
ஈழத்தமிழர்களுக்கும் குரல் கொடுப்பார்கள் என்றுணர்ந்து செயல்பட வேண்டிய
தருணமிது.மொத்தமாக ஒரே கட்சிக்கு வாக்களிப்பது கட்சி சார்ந்து
நாடாளுமன்றத்தில் வலுவான நிலையை கொண்டு வருமென்றாலும் கூட ஜனநாயக ரீதியாக
ஆரோக்கியமான ஒன்றல்ல.தமிழர்களின் மனநிலை என்னவென்பதை தேர்தல் முடிவுக்கு
பின் அலசுவோம்.
Subscribe to:
Comments (Atom)